Skip to content

உழைத்து முன்னேறு – திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

வாழ்க்கை என்னமோ ஒண்ணாம் வாய்ப்பாடு போல எளிமையானது தான்…

ஆனால் நாம் ஏன் அதை மிகவும் சிக்கலாகிக்கொள்கிறோம்….

நூல்:
பட்டுக்கோட்டை பாடல்கள்

இயற்றியவர்:
திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தலைப்பு:
உழைத்து முன்னேறு

பாடல்:
மாணவர்கள்: ஓரொண்ணு ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
மூவொண்ணு மூணு
நாலொண்ணு நாலு

ஆசிரியர்: ஓரொண்ணு ஒண்ணு
உள்ள தெய்வம் ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
மூவொண்ணு மூணு
முத்துத் தமிழ் மூணு
நாலொண்ணு நாலு
நன்னிலம் நாலு
உள்ள தெய்வம் ஒண்ணு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
முத்துத் தமிழ் மூணு
நன்னிலம் நாலு

மாணவர்: அஞ்சொண் அஞ்சு

ஆசிரியர்: அஞ்சுவதற்கு அஞ்சு

மாணவர்: ஆறொண் ஆறு

ஆசிரியர்: நல்லறிவுகள் ஆறு

மாணவர்: ஏழொண் ஏழு

ஆசிரியர்: இசைக்குலங்கள் ஏழு

மாணவி: ஸரிகமபதநிஸா

மாணவர்: ஏழொண் ஏழு

ஆசிரியர்: இசைக் குலங்கள் ஏழு

மாணவர்: எட்டொண் எட்டு

ஆசிரியர்: எட்டும் வரை எட்டு

மாணவர்: ஒன்பதொண் ஒன்பது

ஆசிரியர்: உயர் மணிகள் ஒன்பது

மாணவர்: பத்தொண் பத்து

ஆசிரியர்: பாடல்கள் பத்து
லாலல்ல லாலல்ல லாலலல்லா
லாலல்ல லாலல்ல லாலலல்லா

ஆசிரியர்: உன்னையெண்ணிப்பாரு
உழைத்து முன்னேறு
உண்மையைக் கூறு
செம்மை வழி சேரு

பெண் குழந்தை: உன்னை யெண்ணிப்பாரு
உழைத்து முன்னேறு
உண்மையைக் கூறு
செம்மை வழி சேரு

ஆசிரியர்: அன்புக்கு வணங்கு
அறிந்த பின் இணங்கு
பண்புடன் விளங்கு
பசித்தவர்க் கிரங்கு

மாணவர்: அன்புக்கு வணங்கு
அறிந்தபின் இணங்கு
பண்புடன் விளங்கு
பசித்தவர்க் கிரங்கு
லாலல்ல லாலல்ல லாலலல்லா
லாலல்ல லாலல்ல லாலலல்லா

ஆசிரியர்: பேதங்கள் தீர்த்து
பெருமையை உயர்த்து
நீதியைக் காத்து
நேர்மையைக் காட்டு

பெண் குழந்தை: நேர்மையைக் காட்டு
பொன் மொழி கேட்டு
பொய்மையை மாற்று
பொறுப்புகள் ஏற்று
பொதுப் பணியாற்று

ஆசிரியர்: திருக்குறள் நூலை
சிறந்த முப்பாலை
கருத்துடன் காலை
படிப்பதுன் வேலை
லாலல்ல லாலல்ல லாலலல்லா
லாலல்ல லாலல்ல லாலலல்லா

நன்றி
கணியன் கிருஷ்ணன், தென்காசி
16/04/2024