Skip to content

திரு. திருவரசமூர்த்தி,மயிலாடுதுறை

திரு. திருவரசமூர்த்தி, மயிலாடுதுறை

பச்சைத் துண்டுடன் ஓர் உழவர் இயக்கப் போராளியாக அறிமுகமான திருவரசமூர்த்தி தற்போது எனது எல்லா செயல்களையும் ஆதரிப்பவராகவும் பரப்புரை செய்பவராகவும் வளர்ந்துள்ளதை அறிந்து எனக்கு புதுத்தெம்பே வந்துவிட்டது. ஏனென்றால் மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் அனைத்து செயல்பாடுகளும் கூட்டமும் சொற்பொழிவுமாகவே அமைந்துவிட்ட நிலை மக்கள் மயமாக்கும் எனது கொள்கைக்கு மிக நெருக்கமானவராக திருவரசமூர்த்தி காணப்படுகிறார்.

அவரது சிற்றூராகிய கோடங்குடியில் நூற்றுக்கணக்கான திருக்குறள் அறிஞர்களை கூட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்தி, ஊரையே விழாக்கோலம் ஆக்கிவிட்டார். மேலும், திருக்குறள் ஒலி பரப்பை தினந்தோறும் செய்து மக்களிடத்தில் திருக்குறள் கருத்துப் பரவ வழிவகை செய்துள்ளார். எனது பத்துக் கட்டளைகளில் ஒன்றான வீட்டில் திருக்குறள் தட்டோடு பதித்தலுக்காக ,17 தட்டோடுகளை வாங்கி ஒரே நேரத்தில் அனைத்து வீடுகளுக்கும் வழங்கியுள்ளார்.

தமிழறிஞர் திரு. பேச்சிமுத்துவை அழைத்து ஆயிரக்கணக்கில் ‘ஏழிளம் தமிழ்’ என்ற தலைப்பில் உள்ள திருக்குறள் புத்தகங்களை வாங்கி வழங்கி வருகிறார். திருவள்ளுவர் ஞான மன்றத்தின் எல்லா வழிக்காட்டுதலையும் செயல்படுத்தும் தொண்டனாக நான் விளங்குவேன் என்று உறுதியளித்துள்ளார். உழவர்களின் போராட்டக்களத்தில் இருந்து திருக்குறள் பரப்புரையிலும் ஈடுப்படுபவரைக் காண்பது அரிது. திருவரசமூர்த்தியின் செயல் திறனும் உழைப்பும் ஞானமன்றத்தில் மேலும் அதிகமாகப் பயன்படவேண்டுமென்றால் அவர் ஒரு சில பயணங்களிலாவது ஈடுபட வேண்டும் அப்போதுதான் திருக்குறள் பரப்புரையில் நாம் காணும் ஏற்ற இறக்கங்களைக் கண்டு அதனை மேம்படுத்தி சிந்திக்க முடியும். இப்படிப்பட்ட இயற்கை வேளாண்மை போராளி திருக்குறளின் உன்னதநோக்கமும் இணைத்துக் கொண்டு மக்கள் இயக்கமாக மாற்ற முன் வர வேண்டும். அதற்கான பல சந்திப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.

மயிலாடுதுறை திருக்குறள் பேரவை  தலைவர் சிவசங்கரனும் மற்றவர்களும் மக்கள் இயக்கமாக மாற்ற  திட்டமிட வேண்டும். அப்போது திருவரசமூர்த்தி, மாணிக்கம் போன்றவர்கள் அதிகமாகப் பயன்படுவார்கள்.

வாழ்க திருவரசமுர்த்தியின் திருக்குறள் தொண்டு.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்