Skip to content

திரு. தங்கமணி,திருச்சி

திரு. தங்கமணி, திருச்சி

திருக்குறள் தொண்டர்கள் வரிசையில் இவர் மாறுபட்டவர். திருக்குறள் கற்றவர்கள் தம்மளவில் அதன் மேன்மையைப் பேசுவதும் போற்றுவதும் தான் அதிகமாகக் காணப்படுவர். ஆனால், தங்கமணியோ ஏழை கூலித் தொழிலாளியாக தேநீர்க் கடைகளுக்கு அடுப்புக்கரி விற்பனை செய்து கொண்டே தான் செல்வங்கள் சூரியா ,உமா , காவியா ஆகிய மூவரையும் 1330 திருக்குறள்களையும் மனனம் செய்ய வைத்து ஒப்பிக்கச்செய்து அதன் வாயிலாக மற்றவர்களையும் திருக்குறள்பால் ஈர்க்கச் செய்துள்ளார்.

அதற்காக  அவர் செலவிடும் நேரமும் உழைப்பும் எதிர்காலத்தில் 3 கவனகச் செல்வங்களை தமிழகத்திற்கு அளிக்கும். மனைவி உடல்நலக் குறைவால் மறைந்துவிட்ட பின்பும் குழந்தைகளை பராமரித்து அவர்கள் மேலும் திறன்பட படிக்கவும் திருக்குறளை பரப்பவும் தான் உழைப்பைக் கொடுத்து வருகிறார்.

இவருக்குப் பக்கபலமாக இருந்து உதவியவர்கள் மறைந்த துவாக்குடி திருக்குறள் பரப்புரை மையும் நிறுவனர் பழனிசாமியும், குமரேசனும் திருக்குறள் கருபேச்சிமுத்துவும் ஆகும். தங்கமணி அதிகம் படிக்காதவராயிருந்தாலும் சிறுவயது முதலே திருக்குறள் சொல்லும் ஒழுக்கநெறிகள் மீது பற்றுக்கொண்டவராய் இருந்திருக்கின்றார். தான் அடைய முடியாத உயரத்தை தன் செல்வங்கள் அடைய வேண்டும் என்று உறுதிபூண்டு எல்லாச் சவால்களையும் எதிர்க்கொண்டு வந்ததால்தான் பாரத் மிகுமின் தொழிலகப்பள்ளியில் தன் குழந்தைகளை படிக்க வைக்க முடிகிறது.

வள்ளுவர் குரல் குடும்பத்தார் திரு பாலகிருஷ்ணன் இ ஆ ப ,திரு.இராசேந்திரன் இ வ ப  தலைமையில் கூட இவர் குழந்தைகளின் படிப்பிற்காக ரூ.3 ,00,000/- (மூன்று இலட்சம்) நிரந்தர வைப்பு நிதி  அளித்துள்ளார்கள்.

திருக்குறள் திருத்தொண்டு மற்றவர்களுக்குப் போகும்போது இன்னொரு வழியில் நமக்கும் பயன் கொடுக்கும்! புகழ் சேர்க்கும் என்பதற்கு இவரது வாழ்க்கையே சான்று .

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்