Skip to content

T.E.S. இராகவன்

T.E.S. இராகவன் (07.10.1931)

திருமலை ஈச்சம்பள்ளி ஸ்ரீனிவாசராகவன் என்பது இவரது முழுபெயர். 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டதுதிருக்குறளைத் தமிழ் மொழியிலிருந்து இந்தி மொழிக்குச் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்தமைக்காக இவரது பெயர் சாகித்திய அகாதமி விருதுக்கு 18 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது.

இவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் ஐந்து பேரக் குழந்தைகளும் உள்ளனர். வடமொழி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியவர். இவரை 25-09-2021 அன்று சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்.

முகுந்தமாலா, பஜகோவிந்தம், ராமாயணம், நாலடியார், பகவத்கீதை, பாரதியாரின் கண்ணன் பாட்டு, முப்பது நாட்களில் இந்தி மொழியைக் கற்கலாம் முதலான 13 நூல்களைத் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழிக்கும் வடமொழியிலிருந்து தமிழ் மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். சென்னை பாஷா சங்கம் இவருக்கு ரத்ன தீபாஎன்ற விருதை அளித்து சிறப்பித்துள்ளது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995