Skip to content

திரு. சி. இராஜேந்திரன் ,வள்ளுவர் குரல் குடும்பம்

திரு. சி. இராசேந்திரன், IRS Retd சென்னை.

“வள்ளுவர் குரல் குடும்பம்” (Voice of Valluvar Family ) என்ற வலைத்தள இயக்கத்தை உருவாக்கி 300 நண்பர்களை இணைத்துக் கொண்டு திருக்குறள் பரப்புரை செய்து வரும் இந்திய வருவாய்ப் பணி அலுவலர் இவர்.

இவரைத் தொலைபேசியில் அறிமுகப்படுத்தியவர்  மொழி இயல் அறிஞர் செ.வை .சண்முகம் .இவர் சேலம் மாவட்டம் கோவிந்தம்பாளையம் கிராமத்தில் பிறந்து அகிலம் முழுவதும் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு திருக்குறள் பெருமைகளை பறை சாற்றும் இவரோடு எனக்கு நட்பு கிடைத்தது அறிய பேறாகும். எளிமையாகவும் இனிமையாகவும் பேசி அனைவரையும் கவரக்கூடியவர்.

ஆனால் ஆழமான ஆன்மீகப் பற்றின் காரணமாக எதையும் இது இறை செயல் என்று உணர்ந்து விருப்பு வெறுப்பின்றி வாழ்பவர்.

யதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின்  இலன்

என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்பவர். கரூரில் வள்ளுவர் கல்வி நிறுவனர் செங்குட்டுவன் கூட்டிய ஒரு கருத்தரங்கில் இவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நல்ல ஒருங்கிணைப்பாளராகவும் சிந்தனையாளராகவும் தெரிந்ததால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

தற்போது நாள்தோறும் அரை மணி நேரம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே திருக்குறள் இயக்கத்தை முன்னெடுக்க முயல்கிறோம். அதனுடைய தொடர்ச்சியில் தான் இந்த நூல் எழுதும் திட்டமும் உருவானது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் நமது நாட்டிலும் உள்ள உயர்நிலை அலுவலர்களுக்கும் திருக்குறள் வாயிலாக வழிக்காட்டுதல்கள் செய்து வருகிறார். விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டே உலகம் முழுவதும் திருக்குறள் ஆர்வலர்களை இணைத்து கொண்டிருந்தவர்.

தற்பொழுது சென்னையில்  துணைத்தலைவர், நிலைத்தீர்ப்பாயம் சுங்கம் ,கலால்,சேவை வரி பொறுப்பேற்றுக் கொண்டு ஒரிசா மாநில இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆர் பாலகிருஷ்ணன் துணைக் கொண்டு அவர் இயற்றிய “நாட்டுக் குறள்” என்ற இசைத் தொகுப்பினை வெளியிட்டு மாபெரும் தொண்டாற்றியுள்ளார்.

இவரோடு சேர்ந்து திருக்குறளுக்கு தமிழக அரசின் சார்பில் எமது குறிக்கோளான “வள்ளுவர் வாரியம்” ஒன்றை உறுதியாக அமைப்பேன் என்று நம்புகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்