Skip to content

வாய்மையே வெல்லும்

இந்திய தேசிய இலச்சினை
இந்தியநாட்டின் தேசிய சின்னம் அர்த்தமுள்ளது.
இதிலுள்ள ஆன்மீகச்செய்தி நாமறியவேண்டும்
இது அன்று அசோகர் புத்தமதத்தில் சேர்ந்தபின்
இவரது போர்வெறி அடங்கியது.தர்மம் தளைத்தது
இதன் அடையாளமாக தர்மசக்கரம் உள்ளது.

இவரது ஆட்சியில் வாய்மை சிறந்து விளங்கியது
இவர் அன்று அறவழியில் ஆட்சிபுரிந்ததை நமக்கு
இந்த தர்மசக்கரம் மேலும் பறைசாற்றுகிறது.
இதில் 4 ஆசியச்சிங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை என
இந்நான்கு பண்புகளைக்குறிக்கின்றன.

இதன் பீடத்தில் “சத்யமேவ ஜெயதே” என்ற
இனிய வாசகம் அழகுற அமைந்துள்ளது.
இந்த வாசகம்”முண்டக உபநிஷத்”தில் உள்ளது.
இதன் பொருள் “வாய்மையே வெல்லும்” என்பது.
இதனை மக்களும்,ஆட்சியாளர்களும் புரிந்தால்
இனி உண்மையோடு இந்தியர்கள் வாழ்ந்தால்
இந்தியநாடு எல்லா வளமனைத்தும் பெறும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாய்மையின்
இன்றியாமையை திருவள்ளுவரும் கூறுகிறார்
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
திருக்குறள் அதிகாரம் 30 : வாய்மை
திருக்குறள் எண்: 291.

இவ்வுலகில் உண்மையைவிட சிறந்தது எதுவும் இல்லை.

https://www.facebook.com/100005566686226/posts/pfbid02cQYcagbmF3wHLcsGYHGioS1h9T4QeoE4djVFpbZyn7ae7DK4SpBV71kmUHMjegQYl/?mibextid=cr9u03