Skip to content

திரு. இராம். மோகன்தாசு,பழவந்தாங்கல், சென்னை

திரு. இராம். மோகன்தாசு, பழவந்தாங்கல், சென்னை.

சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று திருவள்ளுவரை வணங்கி வழிபட்டு வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திருவள்ளுவரை தெய்வப் புலவரென்று திருவள்ளுவமாலையில் 55 தமிழ்புலவர்கள் பாடியும், அதற்குப்பின் வந்த எந்த அரசனும், வள்ளலும் திருவள்ளுவரை போற்றி வணங்கியதாகத் தெரியவில்லை.

கடந்த 800 ஆண்டுகளுக்கு முன் மன்னனால் கட்டப்பட்ட கோவிலில் திருவள்ளுவருக் கென்று ஒரு சன்னதி அமைந்ததும், அதனாலேயே திருவள்ளுவர் திருக்கோவில் என்று பெயர் சூட்டப்பட்டதும் வரலாறு. ஆனால் தமிழ் நாட்டின் எந்த தமிழ் அறிஞரும் புலவரும் இங்கு வந்து வழிப்பட்டார்கள், போற்றிப்பாடல்கள் பாடினார்கள் என்றே செய்தியில்லை என்பது வருந்தத்தக்கது. அந்த கோவிலில் நமது மோகன்தாசு பல திருக்குறள் அன்பர்களை வரவழைத்து திருக்குறள் மறைகளை ஓதி, சொற்பொழிவாற்றி உணவளித்து வருகிறார் என்ற செய்தி நாம் அனைவரும் போற்ற வேண்டியதாகும். அதுமட்டுமல்லாமல், சென்னையிலும் சுற்றுவட்டாரங்களிலும் கம்பரைப் பற்றி பல ஆன்மீக சொற்பொழிவுகளை இப்பொறியாளர் ஆற்றி வருகிறார்.

மாநிலத்தில் எந்த இடத்தில் திருக்குறள் மாநாடுகள் நடந்தாலும் கலந்து கொண்டு சிறப்பாகப் பங்காற்றி வருகிறார். குறிப்பாக, திருவள்ளுவர் ஞானமன்றம் நடத்திய ஐந்து மாநாடுகளிலும் தன் 80 வயது முதிர்ச்சியையும் கவனத்தில் கொள்ளாது கலந்துக்கொண்ட தொண்டராவார்.

அவருடைய எதிர்காலச் செயல் திட்டமாக அவர் கூறுவது தமிழக அரசின் உதவியோடு சென்னைக்கருகில் 100 ஏக்கர் இடம் வாங்கி திருக்குறள் தொண்டர்களுக்கு இடமளித்து அங்கே திருக்குறள் தொடர்பான அனைத்துவகை செயல்பாடுகளும் ஆண்டு முழுவதும் நடைபெற வேண்டுமென்பதாகும். வயதும் வாய்ப்புமிருந்தால் நாமும் அதில் பங்குக்கொண்டு திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்ப்போம்!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்