Skip to content

திரு. கூ. மாரிமுத்து,தஞ்சை

திரு. கூ. மாரிமுத்து, தஞ்சை

“குறள் அரசுக்கழகம்” என்ற அமைப்பை உருவாக்கும் கூட்டத்தில் என்னுடைய தூண்டுதலால் மதுரையில் கலந்து கொண்ட தொண்டர் கூ. மாரிமுத்து. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆதிலிங்கத்தோடு இணைந்து பணியாற்றி மாநிலப் பொருளாளராக இருப்பவர். நான் அக்கழகத்திலிருந்து சற்று விலகியிருந்தாலும், திருவள்ளுவர் ஞானமன்ற மாநாடுகளிலும், கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வதும் அவர் அழைக்கும் கூட்டங்களுக்கு நான் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.

மாரிமுத்துவும், நான் தஞ்சையில் பணியாற்றியபோது நடுவண் அரசின் உணவுப் பொருள் விநியோகத்துறையில் ஊழியராகப் பணியாற்றிக் கொண்டே என்னோடு தொடர்பில் வந்தவர்தான். எந்த சொந்த கோரிக்கையோடும் அல்லாமல் திருக்குறள் பரப்புரையில் உங்களோடு நானும் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளேன் என்று சொல்வதற்காகவே வந்தார்.  வள்ளல் பெருமானின் உயிரியக்கப் பாடங்களையும் திருக்குறளையும், பாடலாகவே பாடிக் காட்டி இவர் பரப்புரை செய்யும் அழகே அழகு.

புலவர் பட்டம் பெறாமலே அத்துறை நண்பர்களால் புலவர் என்று அழைக்கப்பட்டவர் மாரிமுத்து. திட்டமிட்ட வாழ்க்கை என்பதால் குறைந்த ஊதியமே ஓய்வூதியமகப் பெற்றாலும் நிறை வாழ்க்கையை வாழ்ந்து கட்டுபவர் மாரிமுத்து. தஞ்சையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளோடும், தமிழ் அமைப்புகளோடும் தொடர்பில் இருப்பதோடு அதையே மிகப்பெரும் மகிழ்ச்சியானதாக ஏற்று செயல்படுவார். குறிப்பாக தஞ்சை வீரத்தமிழன் வெண்முருகு வீரசிங்கத்தோடு நல்ல நட்பில் இருப்பவர் .  நான்  ஓய்வு பெற்றாது ம் தஞ்சையில் ஒரு பெரிய பாராட்டுவிழாவை இருவரும் நடத்தினார்கள்  ,

சமூகத்தில் நடைபெறும் பல ஊழல்கள் மற்றும் சீர்க் கேடுகளைக் கண்டிக்கும் போது மிகக் கடுமையான சொற்களால் சாடிவிடுவார். அதை அவர் குறைத்துக்கொண்டு அமைப்பு வாயிலாக இன்னும் அதிகத் தொண்டாற்ற வேண்டும் என்று திருக்குறள் தொண்டரை வேண்டுகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்