Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-56 29/03/2024

March 29 @ 6:45 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-56

வசுப மாணிக்கனாரின் ‘வள்ளுவம்’ பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-6)

நூலின் ஐந்தாம் அத்தியாயமான ‘இன்மைநிலை’ குறித்த நயவுரை

நாள்: 29/03/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார். பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் அரும்பணி ஆற்றினார். குன்றக்குடி ஆதீனத்தால் ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். அதுவன்றி சன்மார்க்க சபையினர் அளித்த ‘செம்மல்’ பட்டமும் பெற்ற பெருமகனார். இவரது மறைவிற்குப் பின் தமிழ்நாடு அரசு ‘திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்ட இவர் நுண்மாண் நுழைபுலத்துடன் யாத்த ‘வள்ளுவம்’ என்னும் இந்நூலுள் பன்னிரண்டு சொற்பொழிவுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக வள்ளுவரை முன்வைத்து, அவையோரை நோக்கிப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகளாகும்.

‘இன்மைநிலை’ (அத்தியாயம்-5) குறித்த நயவுரை: ‘நற்றமிழ்’ செ.வ. இராமாநுசன்

நூலாசிரியர் புலவர் செ. வரதராசனார் அவர்களின் புதல்வர். கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். இராணுவப் பொறியியல் துறையில் 38 ஆண்டுகள் பொறியாளராக சேவையாற்றி பணி நிறைவு செய்துள்ளார். ஏற்கனவே,“காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் பாடங்கள்” என்ற குறள் மணம்’ செ. வரதராசனார் எழுதிய நூல் குறித்து நவில்தொறும் நூல்நயம் நிகழ்ச்சி-30ல் உரை நிகழ்த்தியுள்ளார்.
எங்கும், எப்போதும் தூய தமிழில் உரையாடி வருபவர். பல்வேறு தமிழ்ச் சங்கங்களில் பொறுப்புகளை வகித்து தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றார். குறள்வழியில், தமிழ்த் திருமணங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தி வைக்கின்றார். தொலைக்காட்சியில் ஓராண்டிற்கும் மேலாக நாள்தோறும் ‘வள்ளுவர் வாக்கு’ பகுதியில் குறள்-பொருள்-எடுத்துக்காட்டு கதை வழங்கியுள்ளார். ‘நற்றமிழ்’ மற்றும் ‘செந்தமிழ் செம்மல்’ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
ஒவ்வொரு வாரமும், இதே இணைப்பு இதே நேரம்!

Details

Date:
March 29
Time:
6:45 pm - 7:45 pm
Event Categories:
,