Skip to content

எனைத்தானும் நல்லவை கேட்க 34 ஆளுமைகள் 70 காணொளிகள்

திருக்குறள் ஆளுமைகள், ஆர்வலர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள் என்று உலகெங்கும் திருக்குறளுக்காக தனித்துவமாக செயலாற்றுபவர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் நோக்கில் “எனைத்தானும் நல்லவை கேட்க” என்ற ஒரு தொடர் நிகழ்ச்சியை 09-02-2021-ல் தொடங்கப்பட்டு இன்றுவரை 34 ஆளுமைகளை ஆவணப்படுத்தி 70 காணொளிகளை வெளியிட்டுள்ளது..

இந்நிகழ்ச்சியை வலைத்தமிழ் திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேல் மற்றும் வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சி.ராசேந்திரன்,IRS (ஓய்வு) இருவரும் நேர்த்தியாகத் திட்டமிட்டு உரிய ஆளுமைகளை அடையாளம் கண்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப்பதிவை செய்துவருகிறார்கள்.

இதில முதுமையில் உள்ளவர்களை முன்னுரிமை கொடுத்து நேர்காணல் செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆவணப்படுத்திய ஒரு சிலர் நம்மிடையே இன்று இல்லாத நிலையில், அவர்களின் வாழ்வியலை உரிய வகையில் ஆவணப்படுத்தியது குழுவிற்கு மன நிறைவைத் தருகிறது. குறைந்தது 100 பேரை ஆவணப்படுத்தவேண்டும் என்ற இலக்குடன் ஒருங்கிணைப்புக்குழு பயணிக்கிறது.

ஒரு நிறைவோடு வாழும் அனுபவத்தைக் கேட்பது பல நூல்கள் வாசிக்கும் அனுபவத்தையும், இன்னொரு வாழ்வை வாழ்ந்த அனுபவத்தையும் கொடுக்கும் செயலாகும்.

ஆர்வமுள்ளவர்கள் பயணத்தின்போது, நல்ல கருத்துகளை தினமும் உள்வாங்க நேரம் ஒதுக்கி அனைத்து காணொளிகளையும் கேட்டு பயன்பெறவும்.

உங்கள் கருத்துகளை காணொளியின் கீழே பதிவிடவும்.

நிகழ்ச்சி அறிவிப்புப் படங்கள் : https://www.facebook.com/media/set/?set=a.4324276954318345&type=3