Skip to content

அந்த கால மருத்துவங்கள்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

சேத்துப்பட்டு கீழ்ப்பாக்கம் பாலம்
குருசாமி முதலியார் பாலம்

டாக்டர் குருசாமி முதலியார் சாலை

டாக்டர் குருசாமி முதலியார் கட்டிடம் ( KMCH)
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் வாயிலில் சிலை
( கீழே…ஏழைகளின் நண்பன்)

யார் இவர்……

டாக்டர் எம் ஆர் குருசாமி முதலியார்
(07/11/1880-26/06/1958)

மைசூர் சமஸ்தானத்தில் நல்ல மங்களா கிராமத்தில் கட்டட ஒப்பந்ததாரர் ராமசாமி முதலியார்- துர்கம்மா மகனாகப் பிறந்தவர்

“ஏழையென்றும் பணக்காரர் என்றும். இவர் வேற்றுமை கண்டதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் உற்ற தண்பராக விளங்கினார்.

இவருடைய மேசையில், உண்டியல் ஒன்று இருக்கும். சிகிச்சைக்காகக் கட்டணம் ஏதும் கேட்கமாட்டார். நோயாளிகளாகப் பார்த்து, உண்டியலில் ஏதாவது போட்டுவிட்டுப் போவார்கள். பலர், போடாமலும் போவார்கள்.”

நோயாளிகளின் வரிசை, தொடர்ந்து வரும்; சிலரின் நாடியைப் பிடித்து, சிலரின் நாவைப் பார்த்து, சிலரின் கண்களை நோக்கி, ஏன், இன்னும் சிலரின் இருமல் சத்தத்தைக் கொண்டே, நோய்களைக் கண்டுபிடிப்பதில், முதலியார் வல்லவர். ஒருவர் நடந்து வருவதைப் பார்த்தே, அவரின் நோயைக் கண்டுவிடுவார் என்பது முதலியாரிடத்தில் பழகியவர்களும் பயின்றவர்களும், தவறாமல் சொல்வதாகும்.”

“எளிமை, நேர்மை இவற்றின் ஒன்றிணைந்த கலவையே, குருசாமி முதலியார் எனலாம். நோயாளியைப் பரிசோதிப் பதன் மூலமும், தொட்டுப் பார்ப்பதன் மூலமும் நோயைக் கண்டுபிடித்துவிடுவார். நோயாளியின் உடலைக் கைகளால் தொடுவதும், விரல்களால் அமிழ்த்தியும் தட்டியும் பார்ப்பது மான முறைக்கு, மருத்துவ உலகில், ‘தொட்டுத் தட்டுதல்’ (பெர்கஷன்) என்று பெயர். இந்த முறையில், முதலியார் வாளுக்கு நிறைந்த நம்பிக்கையுண்டு.

பொது மருத்துவ மனையில், இளம் பெண் ஒருத்தியைச் சேர்த்திருந்தார்கள். மாலை நான்கு மணியானால், அவளுக்குக் காய்ச்சல் வரும். நடு இரவுக்கு மேல் காய்ச்சல் குறைந்து, காலையில் சரியாகி விடும். மருத்துவர்கள் பலரும் பார்த்தார்கள்; ஒருவருக்கும் நோய் என்ன என்று புரியவில்லை. பிரிட்டிஷ் மருத்துவர் ஒருவர், ‘பெண்ணுக்கு மனநோய்’ என்றுகூடச் சொல்லி விட்டார். ஒருவழியாக, முதலியாரை அழைத்தார்கள். ‘வியப்புக்குரிய வியாதி’ என்ன என்று கண்டுபிடிக்கக் கேட்டார்கள். பெண்ணைப் பரிசோதித்த முதலியார், அவள் முதுகில் ஓரிடத்தில், பென்சிலால் வட்டம் போட்டார். பிரிட்டிஷ் மருத்துவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். இதென்ன பச்சை குத்துகிறார்?’ என்று பரிகாசம் பேசினார்கள். முதலியார் விளக்கினார். வட்டம் போட்ட இடத்தில், உள்ளே ஒரு கட்டி. பகல் வேளைகளில், சீழும் ரத்தமும் கலந்ததால், மாலையில் காய்ச்சல் கண்டது. இரவு, அவ்வள வாக அசைவில்லாமல் படுத்திருக்கும்போது, இந்தக் கலப்பு நிகழாததால், காலை நேரங்களில் காய்ச்சல் இல்லை. பல முறை எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே படங்களில், கட்டி புலப் படவில்லை. கைகளால் தொட்டுப்பார்த்த முதலியார் கண்டு பிடித்துவிட்டார்; மற்ற சிகிச்சைகளை நிறுத்திவிட்டு, ‘சல்ஃபா’ மருந்துகளைப் பரிந்துரைத்தார். மூன்றே நாட் களில், அந்தப் பெண், இயல்பு நிலைக்கு வந்தாள்; ஒரு வாரத்தில், சொந்த கிராமத்துக்குப் புறப்பட்டுப் போனார்.மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி – அரசு பொது மருத்துவ மனையின் தலைப்புச் செய்தியாக, அடுத்த சில மாதங்களுக்கு இதுவே ஆனது.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
(பண்பு உடைமை குறள் எண்:996)

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.

பெரியாரைத் துணைக் கோடல்

in my view ,in each discipline there were/ are great stalwarts/ (living) legends. (There are many in our team too)

The juniors/ youngsters need to try to read their life histories..it will amount to talking to them in 1-1 basis.

It would help us to do our work with Zeal and enthusiasm.

திருக்குறள்: 441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

Explanation:
Let (a man ) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

அந்தக் கால மருத்துவர்கள்(2016)
டாக்டர் சுதா சேஷையன்
வானதி பதிப்பகம்
264 பக்கங்கள்
விலை ரூபாய் 150/-

தொகுப்பு
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org