Skip to content

டாக்டர் சுப. திருப்பதி எம்.பி.பி.எஸ்

டாக்டர் சுப. திருப்பதி எம்.பி.பி.எஸ் (16.11.1973)

திருமதி விசாலாட்சி திரு. .சுப. சுப்பையா இணையரின் மகனாக  16-11-1973 அன்று மதுரை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தவர். திருச்சி காமகோடி வித்யாலயாவில் பள்ளிக் கல்வியும் தஞ்சை, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளும் மும்பை, தில்லி, வேலூர், ஜப்பான், பெங்களூரு மருத்துவத் துறைகளில் சிறப்பு பயிற்சிகளும் சட்ட மருத்துவமும் பயின்றுள்ளார். மூளை நரம்பியல் சட்டம் மருத்துவம் குறித்து ஆய்வு செய்தவர். MBBS, MCh(Neurosurgery), FNS (Japan), PGDMLE ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

இந்திய, உலக அளவில் மாநாடுகளில் உரை நிகழ்த்தியுள்ளார். பல இதழ்கள் தொகுப்பு நூல்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். i) தலைவர், Madurai Neurosurgical Academy, ii) இந்திய மருத்துவ மன்றத்தில் பல பொறுப்புகள், iii) செயலர், Trichy Neuro Club, iv) ஒருங்கணைப்புச் செயலர், Aneurysm 360; MNA 2019 சர்வதேச மாநாடு, iv) செயற்குழு உறுப்பினர், TamilNadu Association of Neurological Surgeons, v) தக்கார்,பல அறநிலைகள்  எனப் பல அமைப்புகளில் தலைவர், உறுப்பினர் உட்பட பல பதவிகளிலும் இருந்துள்ளார். i) Distinguished contributor to Indian Neurosurgery, (State of Art – Indian Neurosurgery”; Symposium show casing Indian Neurosurgery and Diversity of Indian Culture, Mumbai 2016), ii) Prof. Padmanur RamaRao Orator. IMA TNSB. ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

i) Mild Head Injury:Revisited. Acta Neurochir (wein), (Cited in WHO -World Health Organization- Manual on Neurological Disorders), ii) A Patient with Proptosis Chapter 18, Practical Neurosurgery – analysis of Clinical cases; Thieme, iii) NI Feature: Citadels Sculpting Future – Commentary: Department of Neurosurgery, Madurai Medical College and the development of neurosurgery in South TamilNadu. Neurology India, iv) Prevention of Positional Plagiocephaly by Traditional Practice in South India, 18th Annual Meeting of Congress of Neurological Surgeons CNS), Houston, USA,  ஆகிய மருத்துவக் கட்டுரைகளையும் v) The Procedure of Prior Informed Consent, vis-a-vis The Doctor-Patient Relationship: Revisited – The Indian Scenario – சட்ட மருத்துவ ஆய்வு, vi) “மனசாடுதல்” – சிறுகதை; தினமணிக்கதிர், vii) சிந்தனை மொழிஓர் அறிமுகம்; தனித்தமிழும் இனித் தமிழும் நூல், viii) ஏழிளந்தமிழ்பயனுரை, ix) திருக்குறளும் கொரானாவும்; விகடன் இயர் புக் 2021, எனப் பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் இயற்றியுள்ளார்.

.சுப.அறக்கட்டளையின் நிறுவனர். தனது வாழ்வியல் செயல் நோக்கங்களாக, சாலை விபத்துகள் அற்ற இந்தியா, மருத்துவ விழிப்புணர்வு, பழந்தமிழ் நூல்கள் பதிப்பு, பாதுகாப்பு, ஆவணப்படுத்துதல், அறம் சார்ந்த எளிய மனிதனுடைய வாழ்வு, போரற்ற உலகம், இயற்கை அறிவியலை மனிதர்களோடு ஒருங்கிணைத்தல், அடுத்த தலைமுறை மீதான நம்பிக்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகியனவற்றைக் கொண்டுள்ளார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995