Skip to content

டாக்டர் கு. கணேசன்

டாக்டர் கு. கணேசன் (20.05.1960)

சேலம் கவிஞர், முனைவர் கு. கணேசன், தமிழ் இலக்கியம், பொருளியல், அரசியல், நிர்வாக இயல், கல்வியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 20-05-1960இல் பிறந்தவர். தமிழ்க் கவிதை குறித்து ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழ்க் கல்வியாளர், தமிழ் படைப்பாளி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் எனப் பன்முகம் கொண்ட இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.

இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன.

சுப்பிரமணியசிவா, சேலம் முருகு சுந்தரம், முருகு சுந்தரம் கவிதைகள் சாகித்திய அகாதெமிக்காக இவரால் எழுதப்பெற்ற நூல்கள் ஆகும். இவரின் வேலன் பார்த்த அதிசய அட்லாண்டிக், அன்புள்ள அப்பா ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களைத் தேசியப் புத்தக நிறுவனம் (NBTI) வெளியிட்டுள்ளது.

திருக்குறள் உரை, வள்ளுவத்தில் வாழ்க்கை, வள்ளுவம்செவ்வியல் இலக்கியத்தில் இருந்து நவீனத்திற்கு ஆகிய இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கன.

கவிஞர் முனைவர் கு.கணேசன் அவர்களின் இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழக அரசுதமிழ்ச் செம்மல் விருது’, தமிழ்நாடு அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.. விருது, மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், இயற்றமிழுக்குரிய கலைமாமணி விருது ஆகிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளது.